நாட்டில் 2000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் – அரசின் புதிய திட்டம்!

0
நாட்டில் 2000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் - அரசின் புதிய திட்டம்!
நாட்டில் 2000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் - அரசின் புதிய திட்டம்!
நாட்டில் 2000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் – அரசின் புதிய திட்டம்!

HP ஆனது இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகள் முழுவதும் 2000 டிஜிட்டல் வகுப்பறைகளை செயல்படுத்த உள்ளது. இது HP Accessible Learning for All (ALFA) முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளது.

டிஜிட்டல் வகுப்பறைகள்:

HP இந்தியா இன்று HP ALFA திட்டத்தின் கீழ் 2000 டிஜிட்டல் வகுப்பறைகளை செயல்படுத்துவதாக அறிவித்தது. இந்த டிஜிட்டல் வகுப்பறைகள் 17 மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைக்கப்படும். இந்த முயற்சியானது இந்திய அரசின் இலக்குகளின் புதிய கல்விக் கொள்கை (NEP) -2020 தொலைநோக்குப் பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயரும் வீட்டு வாடகை – பொதுமக்கள் அதிர்ச்சி! என்ன இவ்வளவா?

இந்த முயற்சியில் அரசுடன் இணைந்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பணியாற்ற HP கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான hpindiacsr.com இணையதளம் மூலம் தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 07, 2022 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்டி-ஃபங்க்ஷன் பிரிண்டர்கள், வெப்கேம்கள், ஆசிரியர்களுக்கான லேப்டாப், ஸ்மார்ட் டிவிகள், ஆண்ட்ராய்டு பாக்ஸ்கள் மற்றும் இன்டர்நெட் டாங்கிள் உள்ளிட்ட தொழில்நுட்பத்துடன் ஒவ்வொரு வகுப்பறையையும் வடிவமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) DIKSHA பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடத்திட்டம் வகுப்பறை கற்றல் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். முதல் கட்டத்தில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செயல்படுத்தப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!