“பாரதி கண்ணம்மா” வெண்பாவின் வித்தியாசமான கர்ப்பகால போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

0
"பாரதி கண்ணம்மா" வெண்பாவின் வித்தியாசமான கர்ப்பகால போட்டோஷூட் - ரசிகர்கள் வாழ்த்து!
“பாரதி கண்ணம்மா” வெண்பாவின் வித்தியாசமான கர்ப்பகால போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற பிரபல சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா ஆசாத். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் புது விதமான மேக்கப்பில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

வெண்பா போட்டோஷூட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் தற்போது டாப் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அந்த சீரியலை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததற்கு வெண்பா என்னும் கேரக்டரும் ஒரு காரணம் தான் என்பதே யாராலும் மறுக்க முடியாது. அந்த வெண்பா கேரக்டரில் நடித்து வரும் பரீனாவை ஏற்கனவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு தெரிந்த முகம் வேறு இந்த சீரியலில் காட்டும் முகம் வேறு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிரித்த முகத்தோடு விஜேவாக பார்த்த அவரை தற்போது வில்லி காதாபாத்திரத்தில் பார்க்க வித்தியாசமாக தான் உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

இவருக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதே பல ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் இன்ப அதிர்ச்சியாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதை பார்த்ததும் இது போட்டோஷூட் ஆக இருக்குமோ என்று சிலர் குழம்பி வந்தாலும் அதெல்லாம் இல்லை நாலு வருஷத்து கனவு இப்போதான் நிறைவேறுது என்று கேப்ஷன் போட்டு தாயாகப் போகும் நல்ல செய்தியை சொன்னார். ஆனால் அதன் பின்னர் பல்வேறு மாறுபட்ட போட்டோஷூட்களை நடத்தி பல நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றார்.

தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!!

ஆனாலும் நிறுத்தி விடாமல் பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். கர்ப்பமாக இருப்பது ஒரு நோயல்ல, என் வேலையை தான் நான் செய்கிறேன். இதை கர்ப்பமாக இருக்கும் போது செய்யக்கூடாது என விளக்கம் அளித்துள்ளார். இருந்தாலும் அவர் செய்வது ஓவராக தான் இருக்கிறது. ஆனால் எதையும் காதில் வாங்காமல் அவர் போட்டோஷூட்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிலையில் புதிய மேக்கப்பில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!