சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!

0
சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!
சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!
சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!

வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் மானியத்தொகை வந்துவிட்டதா என்பதனை எப்படி சரி பார்க்கலாம் என்பது குறித்த விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கான மானியம்:

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (LPG) மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிலிண்டருக்கான மானியம் யாருக்குமே வரவில்லை. அதன் பின்பு, ஒரு சிலருக்கு மட்டும் சிலிண்டருக்கான மானியம் கிடைத்தது. ஆனால், பலரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (LPG) மானியம் கிடைக்கவில்லை என குற்றசாட்டை வைத்தனர்.

Exams Daily Mobile App Download

அதாவது, சிலிண்டருக்கான மானியம் கிடைப்பதற்கும் சில வழிமுறைகள் இருக்கிறது. அதாவது, வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் இருந்தால் இந்த சிலிண்டருக்கான மானியம் கிடைக்காது. மேலும், கண்டிப்பாக சிலிண்டர் இணைப்புடன் ஆதார் கார்டை இணைந்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டாலும் கூட சிலிண்டருக்கான மானியம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கிற்கு வந்துவிட்டதா என்பதனை கண்டறியவே பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் மூலமாகவே மானியத்தொகை கிடைத்துவிட்டதா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்.

வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்களுக்கு விடுமுறை – காரணம் இது தான்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

முதலில் சிலிண்டருக்கான மானியம் கிடைத்துவிட்டதா என்பதை சரிபார்க்க Mylpg.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். பின்பு, Give your feedback online என்பதை கிளிக் செய்து வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர் ஆகிய விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர், Feedback Type என்பதை கிளிக் செய்து Complaint விருப்பத்தை தேர்வு செய்து Next கொடுக்க வேண்டும். இதன் பின்னர் மானியத்தொகை கிடைத்துவிட்டதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!