கோபி & ராதிகா பற்றி அறிந்து தற்கொலை செய்யும் பாக்கியா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கோபி & ராதிகா பற்றி அறிந்து தற்கொலை செய்யும் பாக்கியா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபி & ராதிகா பற்றி அறிந்து தற்கொலை செய்யும் பாக்கியா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபி & ராதிகா பற்றி அறிந்து தற்கொலை செய்யும் பாக்கியா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியலின் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த அந்த தருணம் இதோ வந்து விட்டது. கோபி – ராதிகா பற்றிய உண்மையை நேரில் பார்த்து தெரிந்து கொள்கிறார், பாக்கியா. அடுத்த அதிரடி முடிவு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அதிரடி திருப்பம்:

பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி திருப்பங்கள், விறுவிறுப்பு என செம சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.. சீரியலின் கதைப்படி, கோபி தான் மனைவி பாக்கியா மற்றும் குடும்பத்தை எல்லாம் விட்டுவிட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இதற்காக பல பொய்களை சொல்லி கூடுவதை ஏமாற்றி வந்தார். இந்நிலையில் கோபி பற்றிய உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. கோபிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை ராஜேஷ் வந்து சண்டை போட்ட பின்பு ராமமூர்த்தி தாத்தா எல்லோரிடமும் சொல்லி விடுகிறார். இதை கேட்டு குடும்பமே உறைந்து விட்டது.

தமிழகத்திலும் காலரா நோய் பரவல்? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! அமைச்சர் விளக்கம்!

மேலும், ஈஸ்வரி அம்மா போன் செய்து கோபியிடம் பேச அவர் வேக வேகமாக காரில் கிளம்பி வருகிறார். வரும் வேகத்தில் கோபியின் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ராதிகா, பாக்கியா இருவரும் ஒரே நேரத்தில் பதறி போய் ஓடி வருகிறார்கள். இந்த சூழலில் கோபி – ராதிகா பற்றிய உண்மை பாக்கியாவுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற பாக்கியா, தன் கணவரும் தன் தோழி ராதிகாவும் இப்படி ஏமாற்றி விட்டார்களே என நொறுங்கி போய் விட்டார். இதனால் தன்னையே மறந்து மழையில் நனைந்து கொண்டு ரோட்டில் நடந்து சென்றார்.

இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து கோபி, செழியனுக்கு போன் பண்ணி நடந்ததை கூறுகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர். அப்போது ரிசப்ஷனில், கோபியின் மனைவி வந்தாங்க அவுங்கதா ஆஸ்பிட்டல் பில் காட்டுனாங்க என ஜெனி மற்றும் எழிலிடம் கூறினார். இதற்கிடையில் கோபி பாக்கியா ஏன் வரல என கேட்கிறார். இந்த பக்கம் பாக்கியா மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வருகிறார். இதை பார்த்து பதறிய செல்வி என்னாச்சு அக்கா என்று கேக்க பாக்கியா கோபத்துடன் ஒன்னும் இல்லை போய் வேலைய பாரு என திட்டி வருகிறார்.

Exams Daily Mobile App Download

மேலும் ஜெனி வீட்டுக்கு வந்து என்னாச்சு ஆண்டி எங்க போனீங்க அங்கிள் நீங்க ஆஸ்பிட்டலுக்கு வரலைன்னு சொல்லறாரு, ஆனா ரிசப்ஷன்ல நீக்க பணம் கட்டுனாங்கனு சொல்றாங்க என்று குழப்பத்துடன் கேட்க, அதற்கு பாக்கியா நான் பணம் கட்டல உன் அங்கிள் மனைவி கட்டுனாங்கனு, கோபி ராதிகா பற்றிய உண்மை சொல்லிவிடுவார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர். மேலும் பாக்கியா இந்த அதிர்ச்சியால் தற்கொலை செய்ய முயற்சி செய்வாரா? இல்லை தன் கணவனை ராதிகாவிற்கு விட்டுக்கொடுப்பாரா எந்த நோக்கில் கதை நகர உள்ளது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here