பாரதி கண்ணம்மா ஹீரோவுக்கு பிரபல சீரியல் வில்லியுடன் காதலா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
பாரதி கண்ணம்மா ஹீரோவுக்கு பிரபல சீரியல் வில்லியுடன் காதலா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா ஹீரோவுக்கு பிரபல சீரியல் வில்லியுடன் காதலா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா ஹீரோவுக்கு பிரபல சீரியல் வில்லியுடன் காதலா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி ரோலில் நடிக்கும் அருண் பிரசாத் பிரபல சீரியலில் வில்லியாக வலம் வரும் நடிகையை காதலிக்கும் தகவல் காட்டு தீயை விட வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அருண் பிரசாத் காதலி:

விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது டி ஆர் பி ரேட்டிங்கில் முதல் ஐந்தில் ஒன்றாகவும், அதிக பார்வையாளர்களை ஈர்த்தும், இன்று வரை ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்களுடன் நகர்ந்து புது கதைக்களத்துடன் ஒலிபராகி வருகிறது. அதாவது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களான பாரதியும், கண்ணம்மாவும் எப்போது சேர்வார்கள் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் கதாபாத்திரங்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற ஆவலுடன் தொடர் நகர்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் ஆரம்பத்தில் டைட்டில் ரோலான கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக டாக்டர் பாரதி ரோலில் அருண் பிரசாத் நடித்து வருகிறார். சமீபத்தில் ரோஷினி சீரியலில் இருந்து விலகிய பிறகு அவரிடத்தில் விதுஷா ஸ்ரீ கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி விருது நிகழ்ச்சியில் Find of the year விருது விதுஷாவிற்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சிறந்த சின்னத்திரை ஹீரோவிற்கான விருது பாரதி கண்ணம்மா அருண் பிரசாத்திற்கு கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு அது கிடைக்கவில்லை.

விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

அந்த வரிசையில் விஜய் டிவி பிரபல சீரியலில் ஒன்றான ராஜா ரணி 2ல் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அர்ச்சனாவுக்கு சிறந்த வில்லி விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது. அவர் மேடையில் விருது வாங்கும் சமயம் ஆங்கர் அர்ச்சனா மற்றும் மகேஷ் அவர்கள் அவரை டாக்டர் மற்றும் டி.என்.ஏ என்று பல சந்தேக துணுக்குகளை வீசி அவர்களை கலாய்த்ததால் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அருண் பிரசாத், அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக இணையத்தில் தீயாக செய்திகள் பரவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here