Degree முடித்தவர்களுக்கு DIAT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
Degree முடித்தவர்களுக்கு DIAT நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு DIAT நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு DIAT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் (DIAT) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நாளை (22.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DIAT வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Junior Research Fellow பணிக்கு என 01 இடம் மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தில் (DIAT) காலியாக உள்ளது.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics, Electronics, Applied Physics, Optics, Photonics of Science, Engineering பாடப்பிரிவில் M.Tech, M.Sc, MS Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.31,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

DIAT விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (22.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!