மதுரை மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2023 – 88 காலிப்பணியிடங்கள்!
மதுரை மாவட்ட சுகாதார சங்கத்தில் இருந்து Staff Nurse மற்றும் Mid Level Health Provider பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 88 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DHS மதுரை |
பணியின் பெயர் | Staff Nurse மற்றும் Mid Level Health Provider |
பணியிடங்கள் | 88 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DHS மதுரை காலிப்பணியிடங்கள்:
- Staff Nurse – 86 பணியிடங்கள்
- Mid Level Health Provider – 2 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
DHS மதுரை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் DGNM, B.Sc நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
Exim வங்கி வேலைவாய்ப்பு 2023 – 30 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Follow our Instagram for more Latest Updates
வயது வரம்பு:
மாவட்ட சுகாதார சங்க மதுரை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மதுரை மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் நிர்வாகச் செயலர்/ சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், விஸ்வநாதபுரம், மதுரை மாவட்டம் – 625014. என்ற முகவரிக்கு 27-01-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.