தமிழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – ரூ.20,000/- வரை மாத ஊதியம்
Pharmacist, Data Entry Operator, Driver மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS Cuddalore) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது, தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சுகாதார சங்க வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Pharmacist – 01, Dental Assistant – 05, Physiotherapist – 03, Urban Health Nurse – 06, Multipurpose Hospital Worker – 08, Driver – 07, Optometrist – 01, Refrigeration Mechanic – 01, Data Entry Operator – 01 என மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. Pharmacist பணிக்கு D.Pharm Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Dental Assistant, Driver பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Physiotherapist பணிக்கு Physiotherapy பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Urban Health Nurse பணிக்கு Nurse பாடப்பிரிவில் சான்றிதழ்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
- Multipurpose Hospital Worker பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Optometrist பணிக்கு Optometrist / Ophthalmic Assistant பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Refrigeration Mechanic பணிக்கு Refrigeration Mechanic and Air Conditioning பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Data Entry Operator பணிக்கு Computer Applications பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் Diploma முடித்தவர்கள் மற்றும் Typewriting பிரிவில் Lower சான்றிதழ்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட சுகாதார சங்க பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 30.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.