T20 World Cup இந்திய அணி அறிவிப்பு – ஆலோசகராக தோனி நியமனம்! அஷ்வினுக்கு வாய்ப்பு!

0
T20 World Cup இந்திய அணி அறிவிப்பு - ஆலோசகராக தோனி நியமனம்! அஷ்வினுக்கு வாய்ப்பு!
T20 World Cup இந்திய அணி அறிவிப்பு - ஆலோசகராக தோனி நியமனம்! அஷ்வினுக்கு வாய்ப்பு!
T20 World Cup இந்திய அணி அறிவிப்பு – ஆலோசகராக தோனி நியமனம்! அஷ்வினுக்கு வாய்ப்பு!

வரும் அக்டோபர் மாதம் முதல் நடைபெற இருக்கும் T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் பங்குபெறும் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் வீரர் டோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி

உலக நாடுகளை சேர்ந்த சுமார் 16 அணிகள் பங்கேற்கும் T 20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் (UAE) வைத்து அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி துவங்குகிறது. அந்த வகையில் அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி குறித்த அறிவிப்புகள் நேற்று (செப்டம்பர் 8) வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் திட்டம்?

இந்த உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வருண் சக்ரவர்த்தி ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் T 20 தொடரில் இருந்து கடந்த 3 வருடங்களாக ஒதுக்கப்பட்டு வந்த அஷ்வினுக்கு உலகக்கோப்பை தொடரில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான T 20 போட்டிகளில், இந்திய அணியை கேப்டன் விராட் கோலி தலைமை தாங்க உள்ளார். இருந்தாலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை ICC கோப்பைகளை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் ICC உலக்கோப்பை தொடரில் அனுபவம் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான டோனிக்கு, 2021 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டோனி இதுவரை 3 விதமான ICC கோப்பைகளை இந்தியாவுக்காக பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் மற்றும் பிரித்வி ஷா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

போட்டிகளில் தன் திறமையை சிறப்பாக காட்டும் பாக்கியா, மகிழ்ச்சியில் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

தவிர காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேல் எவ்வித ஆட்டங்களிலும் கலந்து கொள்ளாத ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களின் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இஷன் கிஷன், கே.எல் ராகுல் விக்கெட் கீப்பர்களாக அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்களாக அஷ்வின், ராகுல் சஹர், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களாக ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – தமிழக சுகாதாரத்துறை!

இந்திய அணி வீரர்களின் விவரங்கள்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக்கேப்டன்), கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிச்சந்திர அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

காத்திருப்பு வீரர்கள்: ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!