‘தல’ தோனி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

0
'தல' தோனி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
'தல' தோனி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
‘தல’ தோனி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மஹேந்திர சிங் தோனியின் மனைவி ஷாக்ஷியின் பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

முன்னொரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், தூணாகவும் விளங்கியவர் வீரர் மஹேந்திர சிங் தோனி. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து ஒரு கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்கிற இவரது லட்சியத்தை அடைய இவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு தோல்வியையும், வளர்ச்சியின் படிக்கல்லாக மாற்றி இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் மஹேந்திர சிங் தோனி.

சென்னையில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

இப்படி ரசிகர்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களும் சொந்தக்காரரான தோனியின் கடந்த கால வாழ்க்கை பற்றி நம் எல்லாரும் அறிந்திருக்கலாம். அந்த வகையில் தோனியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், அவருக்கு உந்து சக்தியாக இருப்பவர் அவரது மனைவி சாக்ஷி தோனி. அசாம் மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட சாக்ஷி ராவத் ஒரு ஹோட்டல் நிர்வாகி ஆவர். ஹோட்டல் நிர்வாக பயிற்சியின் போது கொல்கத்தா தாஜ் ஹோட்டலில் தோனியை சந்தித்த அவரது மனைவி சாக்ஷியின் காதல் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் – முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு!

இவர்களது காதல் கடந்த 2010ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் 6 வயதில் ஜிவா என்கிற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தற்போது 33 வயதை எட்டியிருக்கும் சாக்ஷிக்கு இன்று பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் நண்பர்கள் புடை சூழ, சாக்ஷி தோனி கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறது. இந்த பிறந்தநாள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here