தருமபுரி மாவட்ட வருவாய் துறை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,100/-

0
தருமபுரி மாவட்ட வருவாய் துறை வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.35,100/-
தருமபுரி மாவட்ட வருவாய் துறை வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.35,100/-
தருமபுரி மாவட்ட வருவாய் துறை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,100/-

தருமபுரி மாவட்ட வருவாய்‌ அலகில் உள்ள, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி ஆகிய வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்‌ பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இந்த அரசு பணிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தருமபுரி மாவட்ட வருவாய் துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்‌
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:

  • தருமபுரி வட்டம் – 2 பணியிடங்கள்
  • பென்னாகரம் வட்டம் – 2 பணியிடங்கள்
  • பாலக்கோடு வட்டம் – 2 பணியிடங்கள்
  • காரிமங்கலம் வட்டம் – 9 பணியிடங்கள்
  • நல்லம்பள்ளி வட்டம் – 7 பணியிடங்கள்
கிராம உதவியாளர்‌ கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள்‌ குறைந்தபட்சம்‌ 5-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. விண்ணப்பதாரர்‌ பணியிடம்‌ காலியாக உள்ள வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தமிழக இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – மாத உதவித்தொகை பெற விண்ணப்பம்!

உதவியாளர்‌ வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

சிறப்பு காலமுறை ஊதியம்‌ (நிலை-06) – ரூ.11,100 முதல் ரூ. 35,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
தருமபுரி மாவட்ட தேர்வு செயல்முறை:
  • படித்தல்‌ மற்றும்‌ எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு
  • நேர்காணல்
கிராம உதவியாளர்‌ வேலைவாய்ப்பு முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.11.2022
  • படித்தல்‌ மற்றும்‌ எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு நாள் – 30.11.2022
  • நேர்காணல் நாள் – 15.12.2022 & 16.12.2022
விண்ணப்பிக்கும் முறை:

தருமபுரி மாவட்ட இணையதள முகவரி https://dharmapuri.nic.in/  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌. மேலும்‌, தேர்வு முறை குறித்த இதர விவரங்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக இணையதள முகவரி https://dharmapuri.nic.in/ வாயிலாக அறிந்துகொள்ளலாம்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!