ஐஸ்வர்யாவுடன் விவகாரத்திற்கு பிறகு தனுஷ் மகன்களுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் சோகம்!

0
ஐஸ்வர்யாவுடன் விவகாரத்திற்கு பிறகு தனுஷ் மகன்களுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் சோகம்!
ஐஸ்வர்யாவுடன் விவகாரத்திற்கு பிறகு தனுஷ் மகன்களுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் சோகம்!
ஐஸ்வர்யாவுடன் விவகாரத்திற்கு பிறகு தனுஷ் மகன்களுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் சோகம்!

தமிழ் சினிமா துறையில் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் மனதை தாக்கும் வகையில் பல சம்பவங்கள் நடிகர், நடிகைகளின் வாழ்க்கையில் நடந்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா விவாகரத்து விவரம் வெளியாகியது தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் குறித்த போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் போஸ்ட்:

பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குனர் செல்வராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் தனது அண்ணன் செல்வராகவன் ஆசைக்கேற்ப 2002 ல் தமிழ் சினிமா உலகிற்கு காலடி பதித்தவர். தனது அப்பா இயக்கத்தில் உருவாகிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானதை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என பல படங்களில் நடித்து மக்கள் மனதிலும் தடம் பதித்தவர் ஆனார்.

கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

தன் நடிப்பை தாண்டி ஒரு சில படங்களில் பாடல்களும் பாடி வந்தார். மேலும் பாடுவதில் ஆர்வம் மிகுந்தவர் பாடலை எழுதவும் தொடங்கினார். இவ்வாறு அவர் எழுதிய பாடல்கள் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் இடம் பெற்றது. மேலும், தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தில் தனுஷ் எழுதி பாடிய ‘ வொய் திஸ் கொலவெறி’ பாடல் தேசிய அளவில் புகழ் பெற்றவராக ட்ரெண்டாகியது. இவ்வாறு அவர் எழுதிய அனைத்து பாடல்களும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று ஹிந்தித் திரையுலகிலும் ‘ரஞ்சனா’ திரைப்படம் மூலமாகத் தனது வெற்றிக்கொடியை நட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து அவர்களுக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக ஐஸ்வர்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கம் உண்டாகியது. இவர்கள் மீண்டும் இணைவர்களா என்று எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது தனுஷ் Rock With Raja என்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனது இரண்டு மகன்களுடன் கலந்துகொண்ட போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!