தமிழகத்தில் வழக்கு விசாரணை இரவில் நடத்த கூடாது – டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் வழக்கு விசாரணை இரவில் நடத்த கூடாது - டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வழக்கு விசாரணை இரவில் நடத்த கூடாது - டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வழக்கு விசாரணை இரவில் நடத்த கூடாது – டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை தமிழகத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

காவல்துறையினர் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் விக்னேஷ் என்பவர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது விக்னேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது விக்னேஷ் என்பவர் இரவு கைது செய்யப்பட்டு அதிகாலை அயனாவரத்தில் அந்த விசாரணை கைதியை தொடர்ந்து விசாரிக்கும்போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதே போல் திருவண்ணாமலையில் சாராய விற்பனை தொடர்பாக ஒருவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் ஏற்ப்படாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை தமிழகத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயமாம்!

இதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது, இனிமேல் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக்கூடாது என்றும் குற்றவாளிகளை கைது செய்யும் போது அவர்களை மாலை நேரத்திற்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் மேலும் நிகழ்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here