தமிழகத்தில் வதந்தி பரப்புவோருக்கான எச்சரிக்கை – டிஜிபி சைலேந்திரபாபு தகவல்!

0
தமிழகத்தில் வதந்தி பரப்புவோருக்கான எச்சரிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்!
தமிழகத்தில் வதந்தி பரப்புவோருக்கான எச்சரிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்!
தமிழகத்தில் வதந்தி பரப்புவோருக்கான எச்சரிக்கை – டிஜிபி சைலேந்திரபாபு தகவல்!

தமிழகத்தில் Youtube Twitter, Facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக குழுக்கள்

தமிழகத்தில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி அதன் மூலமாக கலவரத்தையும் சண்டைகளையும் ஏற்படுத்துகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Youtube Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பி அதன் மூலம் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

EPFO திட்ட கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – “விஷன் 2047” அறிக்கை!

இதே போல் இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறியவும் கட்டாயமானதாகும். அதனால் இதனை கண்டறியும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் என 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களை கொண்ட “சமூக ஊடகக் குழுக்கள்” என்ற தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த குழுவானது, Youtube Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பி வதந்திகளை பரப்புபவர்கள் உடனடியாக கண்டுபிடித்து அந்த வதந்தியை நீக்கவும் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்கை முடக்கவும் இக்குழு துரிதமாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இக்குழுவால் வதந்தி பரப்புவர் மீது கணினிசார் குற்ற வழக்குகளும் உடனடியாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் போலியான வதந்திகள் மூலமாக சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுக்கவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here