அரசாங்க வேலைவாய்ப்பு 2023 – 480+ காலிப்பணியிடங்கள் || 10 வகுப்பு தேர்ச்சி
சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆனது Group B மற்றும் C பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 487 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Directorate General of Health Services |
பணியின் பெயர் | Group B & C |
பணியிடங்கள் | 48 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Group B & C பணிக்கென காலியாக உள்ள 487 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10 வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / Diploma / Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வந்த உள்ளூர் விடுமுறை… மாணவர்கள் கவனத்திற்கு!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Level 1 முதல் Pay Level 7 அளவில் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.