விமான பயணிகளுக்கு போர்டிங் மறுக்கப்பட்டால் ரூ.10,000 வரை இழப்பீடு – DGCA அறிவிப்பு!

0
விமான பயணிகளுக்கு போர்டிங் மறுக்கப்பட்டால் ரூ.10,000 வரை இழப்பீடு - DGCA அறிவிப்பு!
விமான பயணிகளுக்கு போர்டிங் மறுக்கப்பட்டால் ரூ.10,000 வரை இழப்பீடு - DGCA அறிவிப்பு!
விமான பயணிகளுக்கு போர்டிங் மறுக்கப்பட்டால் ரூ.10,000 வரை இழப்பீடு – DGCA அறிவிப்பு!

செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டால் விமான நிறுவனங்கள் தனிப்பட்ட பயணிகளுக்கு 10,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று புதிய விதிகளை DGCA வெளியிட்டுள்ளது.

அபராதம் அறிவிப்பு

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), செல்லுபடியாகும் பயணச்சீட்டை வைத்திருக்கும் பயணிகள் விமானத்தில் ஏறுவது மறுக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான புதிய வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக, சரியான பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டால் அல்லது அதற்கு ஏற்றவாறு சரியான நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் விமான நிறுவனங்கள் ரூ.10,000 தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும், 24 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் அதற்கான இழப்பீடு ரூ. 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது விமானப் போக்குவரத்து கண்காணிப்புக்குழு பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி விமான நிலையங்களில் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மறுக்கப்பட்ட குறிப்பிட்ட நிகழ்வுகளை கண்டறிந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக DGCA வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கவில்லை என்று தோன்றுகிறது. இது குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆபரேஷனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – கண்ணீரில் தனம்!

மேலும் தனிப்பட்ட விசாரணையும் நடத்தப்பட்டது. AI சமர்ப்பிப்புகளுக்கு பிறகு, அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக தகுதிவாய்ந்த அதிகாரி ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளார். கூடுதலாக, சிக்கலைத் தீர்ப்பதற்கான அமைப்புகளை உடனடியாக அமைக்குமாறு விமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தோல்வியுற்றால், டிஜிசிஏ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளை ஏற மறுத்ததற்காக ஏர் இந்தியாவுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ள DGCA, சிக்கலைத் தீர்க்க உடனடியாக சிறப்பு அமைப்புகளை ஏற்படுத்துமாறு விமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!