உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் Director வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 08.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. Director பணிக்கு என Indian Grain Storage Management & Research Institute-ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD) |
பணியின் பெயர் | Director |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DFPD பணியிடங்கள்:
Director பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் காலியாக உள்ளது.
Director கல்வி விவரம்:
பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree அல்லது Ph.D பட்டத்தை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
Director அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Level – 11 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Director வயது விவரம்:
இந்த DFPD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Director சம்பள விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Pay Matrix Level – 12 என்ற ஊதிய அளவின் படி, மாத சம்பளம் தரப்படும்.
Director பணிக்கான தேர்வு முறை:
Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Director பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து 06.10.2023 அன்றுக்குள் அறிவிப்பில் தரப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.