தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Dy. CPM, PM, ACPM பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) |
பணியின் பெயர் | Dy. CPM, PM, ACPM |
பணியிடங்கள் | 17 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DFCCIL காலிப்பணியிடங்கள்:
- Dy. CPM/PM(Civil) பணிக்கு 13 காலிப்பணியிடங்கள்.
- DY. CPM/PM (S&T) பணிக்கு 02 பணியிடங்கள்.
- ACPM/Dy CPM/PM (S&T) பணிக்கு 01 பணியிடங்கள்.
- Dy. CPM/PM (Electrical) பணிக்கு 01 பணியிடங்கள் என மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
DFCCIL கல்வி தகுதி:
மேற்கண்ட பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் மத்திய அரசு அல்லது மாநில அரசில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகுதி விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
DFCCIL வயது விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
DFCCIL ஊதிய விவரங்கள்:
Dy. CPM/PM(Civil) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.90.000/- முதல் ரூ.2,40,000/- வரை வழங்கப்படும்.
DY. CPM/PM (S&T), ACPM/Dy CPM/PM (S&T) மற்றும் Dy. CPM/PM (Electrical) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.80.000/- முதல் ரூ.2,20,000/- வரை வழங்கப்படும்.
மேலும் இப்பணிகளை வழங்கப்பட உள்ள கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.
DFCCIL தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
DFCCIL விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தகுதியான பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.