திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு – இன்று டிக்கெட் வெளியீடு!

0
திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு - இன்று டிக்கெட் வெளியீடு!
திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு - இன்று டிக்கெட் வெளியீடு!
திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு – இன்று டிக்கெட் வெளியீடு!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆர்ஜித சேவைக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் இன்று (ஜூன் 27) ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது.

இலவச டிக்கெட்

உலகப்புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை என்ற பெயரில் சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையின் கீழ் குறிப்பிட்ட சில பக்தர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு முன்னுரிமை டிக்கெட் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான டிக்கெட் இன்று (ஜுன் 7) ஆன்லைனில் வெளியிடப்பட இருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை போன்றவைகளுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியாகும். சுமார் 8,070 டிக்கெட்டுகள் அடங்கிய இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள பக்தர்கள் இன்று காலை 10 மணிமுதல் வரும் ஜூன் 29ம் தேதி காலை 10 மணி வரை தங்களது ஆதார் எண்ணை கொடுத்து https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சென்னை: அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இதை தொடர்ந்து வரும் 29ம் தேதி ஆர்ஜித சேவைக்கான குலுக்கல் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் வழங்கப்படும். அப்படி ஆர்ஜித சேவைக்காக தேர்வு செய்யப்படும் பக்தர்கள் அடுத்த 2 நாட்களுக்குள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்போது முதலில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here