
ஆகஸ்ட் 9 வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை – கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஆடி மாத திருவிழாக்கள் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின்னர் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் தற்போது ஆடி மாதம் என்பதால் கோவில்களில் திருவிழாக்கள் மூலமாக மக்கள் கூட்டம் அதிகமாகும் என்பதால் அனைத்து முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 31 வரை கட்டணம் தள்ளுபடி!
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரை பகுதிகளில் கூட்டம் அதிகம் சேராமல் இருக்க இன்று (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை பொதுமக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பின் படி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அது தற்போது வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இதனால் அதிக மக்கள் கூடும்பட்சத்தில், அரசின் விதிகளை பின்பற்றுவதிலும், கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இன்று முதல் 9ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முக்கிய கோவில்களில் ஆகஸ்ட் 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு முக்கிய பூஜைகள் நடைபெறும் என்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையில் பொதுமக்கள் கூடி வழிபடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.