திருப்பதி கோவில் செல்வதற்கான தரிசன கட்டண சேவை டிக்கெட் விநியோகம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

0
திருப்பதி கோவில் செல்வதற்கான தரிசன கட்டண சேவை டிக்கெட் விநியோகம் - தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி கோவில் செல்வதற்கான தரிசன கட்டண சேவை டிக்கெட் விநியோகம் - தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி கோவில் செல்வதற்கான தரிசன கட்டண சேவை டிக்கெட் விநியோகம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

அக்டோபர் மாதத்திற்கான தரிசன கட்டண சேவை டிக்கெட்டை தேவஸ்தானம் இன்று வெளியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதி வரைக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருவதுண்டு. நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அதிலும் விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள் என்றால் குறைந்தது 10 மணி நேரம் வரைக்கும் கூட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நாள் ஒன்றிற்கு மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடிகாணிக்கை செய்து வருகின்றனர்.

இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சில சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டன. அதற்கு பிறகு கொரோனா பரவல் குறைய குறைய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம், அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவை ஆகிய அனைத்து சேவைகளும் துவங்கப்பட்டுவிட்டன. மேலும், ஒவ்வொரு மாதத்திற்கான டிக்கெட்டும் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

TN TET தேர்வு தேதியில் மாற்றம்? தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வாரியம் விளக்கம்!

இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று வெளியிட போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரைக்கும் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற இருப்பதால் இந்த 5 நாட்களுக்கு மட்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என திருப்பதி அறங்காவலர் குழு கூட்டத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதிக்கு பிறகு தரிசனம் செய்ய விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக ரூ.300 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here