பெண்களுக்காக வெளியான ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம் – 7.5 % வட்டி!!
மத்திய அரசால் தற்போது வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கென்று பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பெண்களுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேமிப்பு திட்டம்
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு வகையான அறிவிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் பெண்களுக்காக புதிய சிறுசேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இத்திட்டம் கொண்டு வரப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
LICயில் பெண்களுக்கான ஆதார் ஷீலா திட்டம் – முழு விவரம் இதோ!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி வருகிற 2025ம் ஆண்டு மார்ச் வரை மகிளா சமன் சேமிப்புத் திட்டம் (Mahila Samman Savings Certificate) என்னும் புதிய சேமிப்பு திட்டம் தொடங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் ரூபாய் வரை பெண்கள் முதலீடு செய்து கொள்ளலாம். மேலும் மற்ற சேமிப்பு திட்டங்களை விட இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதம் கிடைக்கிறது.
மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு வரிவிலக்கு பலனும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நீங்கள் பகுதியளவு முதலீட்டை திரும்பப் பெறுவதற்கான வசதியும் உள்ளது.