தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு ஏற்ப முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆகையால் அனைத்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர்.
TN Job “FB
Group” Join Now
பின்னர் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவியதால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர். அதன்பின்னர், கொரோனா குறைந்த நிலையில் மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவழைத்தனர். மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வந்ததால் முழுவதுமாக பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
மாவட்டத்தில் ஜூன் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு உத்தரவு!
இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு, விடுமுறை விடப்பட்டன. இதையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (ஜூன் 20) முதல் தொடங்கவுள்ளது. மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.