இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு – அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பொது மக்கள் அச்சம்!

0
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு - அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பொது மக்கள் அச்சம்!
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு - அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பொது மக்கள் அச்சம்!
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு – அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பொது மக்கள் அச்சம்!

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 2,200 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரிக்கும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏறபடுத்தியுள்ளது.

டெங்கு பாதிப்பு:

இந்தியாவில் கடந்த 2017, 2018ம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமெடுத்து பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பருவநிலை மாற்றத்தால் பெய்யும் தொடர் மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. ஏனெனில் அத்தகைய கால கட்டத்தில் தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த கொசுவினால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் புதிதாக 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!

அந்த வகையில் தென் மாநிலங்களான தமிழகத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 168 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மாநில தலைநகர் சென்னையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வடமாநிலங்களான உத்திர பிரதேசம், மேற்கு வாங்களம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் இதுவரை 2,200 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல டெல்லியிலும் கிட்டத்தட்ட 1000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக டெல்லியில் மழை பெய்து வருவதால் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!