தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் டெங்கு காய்ச்சல் – சுகாதாரத்துறை நடவடிக்கை!
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், இதனால் அதிகமாக கொசுக்கள் உற்பத்தி ஆகி, காய்ச்சல்களை பரப்பி வருகிறது. இது தொடர்பாக, தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு பரவல்:
மழை நீர் தேங்குவதால் உண்டாகும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் தற்போது தமிழக முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெங்கு காய்ச்சல் சிறு குழந்தைகளை அதிகம் பாதித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகம் முழுவதும் கனமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் டெங்குவின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெங்குவினால் மதுரையை சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூரில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரும் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து காய்ச்சலில் அவதி பட்டு வந்த சிறுமி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுமியின் வீடு மற்றும் பள்ளி உள்ள பகுதிகளில் வேறு யாருக்கும் காய்ச்சல் உள்ளதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஜெகதீசன், தொடர் காய்ச்சல், வாந்தி, உடல் சோர்வு, கண்களை நகர்த்தும்போது வலி, கால்கள், மூட்டுகளில் கடுமையான வலி, கீழ் முதுகில் வலி, முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது, குணமடைந்தது போல அதிக வியர்வை, உடலில் தடிப்புகள், மீண்டும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் சண்டே மார்க்கெட் செயல்படாது? புதுவை அரசு விளக்கம்!
டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள், வீடுகளில் தொட்டிகள், குடங்களில் நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் மழைநீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்கிறது. இதனால் தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்