தமிழகத்தில் சுங்கச் சாவடி கட்டண உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் சுங்கச் சாவடி கட்டண உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் சுங்கச் சாவடி கட்டண உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் சுங்கச் சாவடி கட்டண உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாக உள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பண்ருட்டி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினரும் கோரிக்கை வைத்துள்ளார்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயா்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும் சுங்க சாவடிகளில் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சுங்க கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 48 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க சாவடிகளில் முதற்கட்டமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்துடன் நிதி நெருக்கடி உள்ள நிலையில் இந்த சுங்க கட்டண உயர்வு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் சரக்கு வாகனங்களின் வாடகையும் மறைமுகமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மேலும் இது தொடர்பாக பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் தி.வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் 28 சுங்க சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி அன்று கட்டண உயர்த்தும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்த விவரங்கள், தினசரி கடந்து செல்லும் மொத்த வாகன விவரங்கள், சாலை மற்றும் சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!