தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலக சங்கம் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பழைய ஓய்வூதிய திட்டம்

கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் திமுக கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியமைத்து இப்போது ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையிலும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் முதல்வருக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் தற்போது தலைமைச் செயலக சங்கம் சார்பில் முதல்வர் முதல்வர் முக ஸ்டாலினுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்னும் OPS அமல்படுத்தப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு கடந்த ஆட்சி காலத்தில் பணப்பயன் பெரும் உரிமையை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைத்தனர்.

மே 6ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!

தொடர்ந்து ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு இன்னும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்படும் என கடந்த மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இப்போது மாநிலத்தின் நிதி நிலைமை சீராகி வருவதால் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதிக்கப்படும் என தலைமைச் செயலகப் பணியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தமிழகத்தில் மட்டும் தான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் (CPS) பணிபுரியும் ஊழியர்களுக்கு G.P.F. மூலம் கடன் பெறும் வசதி இல்லை.

இந்த பணியாளர்கள் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட மற்ற அத்தியாவசிய செலவுகளுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மட்டுமே சார்ந்துள்ளதால் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். அதே போல DA உயர்வு கூட தமிழக அரசு ஊழியர்களுக்கு நிறைவேற்றப்படவில்லை. அந்த வகையில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை நிறைவேற்றப்படாமல் அரசுப் பணியாளர்கள் வருத்தத்தில் இருப்பதால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இது தொடர்பான முடிவை எடுத்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!