தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது முதலான சில திட்டங்களை அமல்படுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான பல அம்சங்கள் இடம் பெற்றதால் அரசு ஊழியர்கள் சங்கங்கள் பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டுமெனவும் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். மேலும் சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கட்சியின் சார்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்த நிதியாண்டில் அமல்படுத்தப்பட்டது. இந்த மாநிலத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2022 – 106 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
சங்கத்தின் மாவட்ட தலைவர், கொள்கை பரப்பு செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர், மாவட்ட துணைத் தலைவர், முன்னாள் மாவட்ட தலைவர் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் அரசுத்துறை வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு தரக்கூடிய ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் பணியில் இருக்கும்போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.