இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – டெல்லி முதலிடம்!
இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்கள் பட்டியல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெண் பாதுகாப்பு:
இந்தியாவில் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் அனைவரும் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்தனர். அதாவது ஆண்களுக்கு சமமான உரிமைகள் வழங்கப்படாமல் வீட்டு வேலை செய்யும் எந்திரமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறி பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று நிரூபித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்து வருகின்றனர். மேலும் பெண்ணடிமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு சம உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் போன்றவற்றில் முன்னுரிமை அளித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது மத்திய, மாநில அரசுகள். இதனை தொடர்ந்து பெண்கள் அரசியல், விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அடிமைபடுத்துவது ஒழிக்கப்பட்டு ஆண்களுக்கு சமமாக மதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதாவது, பெண்கள் அதிகமாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
கனமழை காரணமாக அதிகரித்த தக்காளி, வெங்காயம் விலை – கவலையில் பாகிஸ்தான் மக்கள்!
இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு காவல்துறையினர் கடுமையான தண்டனைகளை விதித்தாலும், இந்த மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மும்பையும், மூன்றாவது இடத்தில் பெங்களூரும் உள்ளது. மேலும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 % அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்