இன்று முதல் ஏப்ரல் 30 வரை இரவு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1.93 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
இதனால் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கடுத்த படியாக டெல்லியில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
அங்கு தற்போது வரை 6,79,962 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 14,589 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை பொதுமக்கள் அத்தியாவசிய, மருத்துவ அவசர தேவைகள் தவிர்த்து வெளிய வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
Super energetic these news