ஜூன் 28 முதல் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு அறிவிப்பு!

0
ஜூன் 28 முதல் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் - அரசு அறிவிப்பு!
ஜூன் 28 முதல் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் - அரசு அறிவிப்பு!
ஜூன் 28 முதல் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு டெல்லி அரசு ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இவை அனைத்தும் ஜூன் 28ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பினை பொறுத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகள் அமலில் உள்ள முழு ஊரடங்கில் தளர்வுகளை படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன. தற்போது டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாறுபாடு அடைந்த வைரஸ் 3வது அலைக்கு காரணமாக அமையலாம் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

கொரோனா இரண்டாவது அலை அதிகரித்ததால் ஏப்ரல் 19 முதல் மே 30 வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்கான அனுமதியுடன் நகரம் மே 31 முதல் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்தகட்டமாக ஜூன் 28 முதல் கூடுதல் தளர்வுகள் அமலாக உள்ளன. அதன்படி “ஜிம்கள் மற்றும் யோகா நிலையங்கள் 50 சதவீத திறனுடன் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் தவறாமல் படிங்க – ஜூலை 1 முதல் ATM கட்டணம்!

மேலும் விருந்து அரங்குகள், திருமண அரங்குகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் 50 நபர்களின் உச்சவரம்புடன் திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரயில், பேருந்து பொது போக்குவரத்து சேவைகள் குறிப்பிட்ட அளவு பயணிகளுடன் செயல்ப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜூன் 14 முதல் சந்தைகள் மற்றும் மால்கள் 50 சதவீத திறனுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!