மாணவர்களுக்கான புத்தகப்பை 2020 திட்டம் – மாநில அரசு உத்தரவு!!

0
மாணவர்களுக்கான புத்தகப்பை 2020 திட்டம்- மாநில அரசு உத்தரவு!!
மாணவர்களுக்கான புத்தகப்பை 2020 திட்டம்- மாநில அரசு உத்தரவு!!

மாணவர்களுக்கான புத்தகப்பை 2020 திட்டம் – மாநில அரசு உத்தரவு!!

மாணவர்களின் புத்தக சுமையால் பள்ளி செல்லும் மாணவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுவதால் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க பள்ளி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு:

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் பள்ளி புத்தகப்பை 2020 என்ற பெயரில் அனைத்து மாநில கல்வி துறை செயலாளர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் ஆண்டுதோறும் 6 முதல் 10-ஆம் வகுப்பு அவரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் இல்லாத 10 நாட்களை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகப்பையின் எடையை கணக்கிட்டு அதில் குறிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு ரூ. 50000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மேலும் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு பள்ளி புத்தகப்பை கூடாது. ஆரம்பப்பள்ளி மாணவர்களான 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் புத்தகப்பை அளவு அவர்களின் 10%-ஆக இருக்க வேண்டும். புத்தகப்பை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை அனைத்து மாநில கல்வித்துறையும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் வயது வரம்பு அதிகரிக்க வேண்டும்-தேர்வர்கள் கோரிக்கை!!

இந்நிலையில் டெல்லி அரசு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் புத்தகப்பை எடையை கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி,” அதிக எடை கொண்ட புத்தக பைகளால் குழந்தைகளுக்கு உடல் நிலை கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் வளரும் குழந்தைகளின் முதுகெலும்பு மற்றும் முன்னங்கால் கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும் இரண்டு மாடி கட்டிடங்களில் வகுப்பறைகள் இருப்பதால் மாணவர்கள் அதிக சுமையை தூக்கிக்கொண்டு படிகள் ஏறும் நிலை உள்ளது.எனவே பள்ளிகள் விரைவில் முடிவெடுத்து ஏற்கனவே நிர்ணயித்த புத்தக அளவை அதிகரிக்க கூடாது. எனவும் மாணவர்கள் அதிக புத்தகங்களை கொண்டு வராத அளவில் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க வேண்டும்”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!