சன் டிவியின் “தெய்வமகள் 2” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவியின்
சன் டிவியின் "தெய்வமகள் 2" விரைவில் தொடக்கம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியின் “தெய்வமகள் 2” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய “தெய்வமகள்” சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

தெய்வமகள் சீசன் 2:

அந்த காலம் முதல் சீரியல்கள் என்றாலே நினைவுக்கு வருவது சன் டிவி தான். பல குடும்ப சீரியல்களை ஒளிபரப்பி வெற்றிக் கண்டுள்ளது. மேலும் பெண்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் என்றால் அதை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது தான் “தெய்வ மகள்” சீரியல். இந்த சீரியல் 5 ஆண்டுகளாக பல எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பானது.

விஜய் டிவியின் ‘கல்யாணம் கல்யாணம்’ சீரியலில் பாரதி, செம்பருத்தி ஷபானா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்த தொடரை விகடன் ஒளித்திரை சார்பில் இயக்குனர் S. குமரன் என்பவர் இயக்க வாணி போஜன், கிருஷ்ணா மற்றும் ரேகா கிருஷ்ணப்பா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். வில்லியாக சின்னத்திரையை காயத்ரி அண்ணியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல் பல விருதுகளை பெற்றுள்ளது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டும் கதை என்றாலே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் புதிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தெய்வமகள் சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்த சத்யா பிரகாஷ் ஜோடி தனது குழந்தையுடன் மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர். இந்த ஹிட் சீரியல் ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் தொடங்க வேண்டும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து இருக்கின்றனர்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here