தமிழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு – மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு - மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!
தமிழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு - மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!
தமிழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு – மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!

தமிழகத்தில் தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி பார்ப்போம்.

பட்டபடிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு

தமிழகத்தில் தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து பட்டப்படிப்பு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கு சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் நேரடி பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதையடுத்து 2ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில், ராஜஸ்தானில் இருக்கும் பிட்ஸ் – பிலானியில் 4 ஆண்டுகள் B.Sc படிப்பினை வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரா மற்றும் உத்தர பிரதேசத்திலுள்ள அமிட்டி பல்கலைக்கழகத்திலும் 3 ஆண்டு BCA பட்டப்படிப்பை படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office ல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ

Exams Daily Mobile App Download

ஆனால் இதற்கு 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வணிக கணிதம் உள்ளிட்ட படிப்புகளில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.  அத்துடன் மாணவர்கள் HCL நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வினை எழுத பயிற்சிகளை தாட்கோ நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தாட்கோ நிறுவனம் கல்வி கட்டணமாக செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் www.tahdco.com என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!