தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 10% தீபாவளி போனஸ்! அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியிலும் அரசு ஊழியர்களுக்கு சுமார் 10% வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி போனஸ்
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் தொகை வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10% போனஸ் தொகை அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
EPFO பயனர்களுக்கு இனிப்பான செய்தி – தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டி! சூப்பர் அறிவிப்பு!
இப்போது அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன்படி, போனஸ் பெற தகுதியான ஊழியர்களுக்கு சம்பள உச்ச வரம்பு ரூ.21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஊழியர்களின் மாதாந்திர ஊதிய வரம்பும் ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் லாப, நஷ்ட கணக்குகளின் அடிப்படையில் அந்தந்த நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்பட இருக்கிறது.
பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!
அதன் கீழ் C மற்றும் D பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் தொகையுடன், 1.67% கருணைத்தொகையும் சேர்த்து மொத்தமாக 10% வரை போனஸ் தொகை அளிக்கப்படும். இதற்கு முன்னதாக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் தொகையை 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என எழுந்து வந்த கோரிக்கைகளுக்கு மத்தியில் 10% போனஸ் தொகை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.