வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகளின் விபரங்கள்!

0
வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகளின் விபரங்கள்!
வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகளின் விபரங்கள்!
வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகளின் விபரங்கள்!

நிதி நிறுவனங்களை விட, தனியார் வங்கிகளை விடவும், பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் வீட்டு கடன்களுக்கு குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதை நாடுகின்றனர். பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் 20 ஆண்டுகால தவணையில் ரூ.75 லட்சத்திற்கு வீட்டுக் கடன் பெற்றால், மாதாந்திர தவணை தொகை ரூ.55,918 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடன் வழங்கும் வங்கிகள் விவரம்:

இன்றைய காலக்கட்டத்தில் மாத சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவது என்பது முடியாத காரியமாக உள்ளது. எல்லோருக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற பலருக்கும் உதவுவது வங்கிக் கடன்கள் தான். இதன் மூலம் தான் பலரின் வாழ்நாள் கனவும் நனவாகின்றது. எனவே இன்று பலருக்கும் வீடு கட்ட உதவுவது வீட்டு கடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய காலத்தில் கட்டிய வீட்டிற்கு ஆன செலவில், இன்று ஒரு சென்ட் இடம் வாங்குவதே பெரிய காரியமாக உள்ளது. அதிலும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களில் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – அரசாணை வெளியீடு!

வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் வீடு வாங்க, வீடு கட்ட, இடம் வாங்க என அனைத்துக்கும் கடன் கொடுக்கின்றன. அதிலும் இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத சரிவில் காணப்படுகின்றது. கொரோனா வருகைக்கு பின்னர் பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து குறைவாகவே வைத்துள்ளது. அதிலும் வங்கிகள் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். அதிலும் பெண்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கி வருகின்றன.

மேலும் வீட்டுக் கடன் வழங்கி வரும் அரசுடைமை வங்கியான பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வீட்டுக் கடன் மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் ரூ.75 லட்சத்திற்கான வீட்டுக் கடனை 20 ஆண்டு கால தவணைத் திட்டத்தில் பெறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு 6.4 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.55,477 தவணைத் தொகையாக வசூல் செய்யப்படுகிறது. மேலும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!