இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

0
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை ரிப்போர்ட்!
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை ரிப்போர்ட்!
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. இது இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து அனைத்து பொதுமக்களையும் அச்சுறுத்தியது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியது. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன் ஒரு பகுதியாக 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதம் என்பதை புரிந்து கொண்ட பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,41,74,650ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,772ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 16,412 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,16,071 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு பணியாளர்களுக்கு DA & DR உயர்வு எப்போது? முக்கிய தகவல் வெளியீடு!

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 98.51 % உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.19 % ஆக குறைத்துள்ளது. மேலும் இதுவரை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.30 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை 131807 பேருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 2,06,88,49,775 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,95,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here