தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு வாபஸ்? அரசுக்கு வலியுறுத்தல்!

1
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு வாபஸ்? அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு வாபஸ்? அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு வாபஸ்? அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழகத்தில் நாளை(ஜூன் 14) முதல் புதிய தளர்வாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

டாஸ்மாக்:

தமிழகத்தில் நாளை(ஜூன் 14) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜுன் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். மேலும் புதிய தளர்வாக கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கடந்த 2020 மே மாத முதல் வாரத்தில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3000 ஆக இருந்த நிலையில் சென்னை பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க கடந்த அதிமுக தலைமையிலான தமிழக அரசு அனுமதி வழங்கியது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இந்த நடவடிக்கைக்கு தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அவர்கள் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும் கொரோனா பரவலை அதிகரிக்கும் வகையில் மதுபான கடைகளை திறக்க கூடாது என்று கூறினார். ஆனால் தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 16 ஆயிரத்தை எட்டி வரும் நிலையில் நாளை(ஜூன் 14) முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 80,834 பேருக்கு கொரோனா தொற்று – 3,303 பேர் பலி!!

இந்த நடவடிக்கை முறையானது என்பதனை தமிழக முதல்வர் சிந்தித்து பார்க்க வேண்டும். அரசு வருவாயை விட தமிழக மக்கள் உயிர் முக்கியமானது என்பதன் அடிப்படையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல் தமிழகத்தில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஆம் திரு பன்னீர்செல்வம் கூறியது உண்மைதான்
    நீங்கள் தவறே செய்திருந்தாலும் மக்களுக்காக மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என்று பரிந்துரை செய்த உங்களுக்கு எங்கள் அன்பார்ந்த நன்றி .தமிழக முதல்வர் அவர்களே அதிமுக ஆட்சி காலத்தில் மதுபான கடைகளை திறக்க கூடாது என்று உங்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது ஆனால் இப்போது நீங்களும் அதே தவறை செய்துள்ளீர்கள் .
    இப்போது மக்கள் ஏன் கருப்புக் கொடி போராட்டம் நடத்தக்கூடாது .
    நீங்களும் மக்களை ஏமாற்றும் செயலில் தான் ஈடுபடுகிறீர்கள் அல்லவா நாங்கள் புரிந்து கொண்டோம் .
    தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை யாராலும் திருத்த முடியாது .
    இதில் பாதிக்கப்படுவது.
    தமிழ்நாட்டு மக்களே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!