அடுத்த 9 நாட்களில் 6 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!

0
அடுத்த 9 நாட்களில் 6 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை - முழு விவரம் இதோ!
அடுத்த 9 நாட்களில் 6 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை - முழு விவரம் இதோ!
அடுத்த 9 நாட்களில் 6 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!

இன்னும் ஒரு சில நாட்களில் 2021ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் 6 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக காணலாம்.

வங்கிகள் அடைப்பு

பொதுவாக ஒவ்வொரு மாதம் துவங்கும் போதும் அதற்குரிய வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் இம்மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்டன. அதன் கீழ், இம்மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட சில பண்டிகை காலங்கள் வருவதால் வங்கிகள் அனைத்தும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு அடைக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – அடுத்த ஆண்டு முதல் அமல்?

அதனால் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை இப்பதிவில் காணலாம். இப்போது டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை ஆறு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஈவ், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஈவ் காரணமாக இன்னும் 6 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் புத்தாண்டு தொடங்குவதற்கு முன் ஆறு நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும். அதன் படி டிசம்பரில் மீதமுள்ள நாட்களுக்கான விடுமுறை பட்டியலின் படி,

  • டிசம்பர் 24 (வெள்ளிக்கிழமை): கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.
  • டிசம்பர் 25 (சனிக்கிழமை): கிறிஸ்துமஸ் மற்றும் நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்படும்.
  • டிசம்பர் 26 (ஞாயிறு): ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை.
  • டிசம்பர் 27 (திங்கட்கிழமை): கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி ஐஸ்வால் மாநிலத்தில் வங்கிகள் மூடப்படும்.
  • டிசம்பர் 30 (வியாழன்): காசி சுதந்திரப் போராட்ட வீரர் யு கியாங் நங்பாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்.
  • டிசம்பர் 31 (வெள்ளிக்கிழமை): புத்தாண்டு தினத்தன்று ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!