டிச.1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

0
டிச.1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு உத்தரவு!
டிச.1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு உத்தரவு!
டிச.1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

மகாராஷ்டிராவில் டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சரவை மற்றும் குழந்தைகள் பணிக்குழுவுடன் ஆலோசித்த பின்னர் முதல்வர் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் காரணமாக கல்வி நிலையங்களில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியது. இதனால், முன்னதாக அக்டோபரில், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு முடிவு செய்தது. கிராமப்புறங்களில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்று மாநில கல்வி அமைச்சர் அறிவித்தார்.

VI பயனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 2GB இலவச டேட்டா! முழு விபரங்கள் இதோ!

மாநில அரசு இன்னும் விரிவான நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடவில்லை என்றாலும், கடுமையான COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பள்ளிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சரவை மற்றும் குழந்தைகள் பணிக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர், கிராமப்புறங்களில் 1-4 ஆம் வகுப்பு மற்றும் நகர்ப்புறங்களில் 1-7ம் வகுப்பு வரை பள்ளிகளை டிசம்பர் 1 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது என்று மகாராஷ்டிர கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

Wipro நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு – முக்கிய விவரங்கள்!

நேரடி வகுப்புகள் மாணவர்களுக்கு கட்டாயமில்லை. மேலும், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும், தேவையான சமூக இடைவெளியை பாரமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலை டிசம்பரில் எதிர்பார்க்கப்படும் போது, அது லேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here