20 சதவீத மானியத்துடன் கடன் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
20 சதவீத மானியத்துடன் கடன் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
20 சதவீத மானியத்துடன் கடன் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
20 சதவீத மானியத்துடன் கடன் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதிதிராவிட நபர்களுக்கு ஆஷா திட்டத்தின் மூலம் 20 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆதிதிராவிடர்களுக்கு கடன்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக மக்கள் தங்கள் வேலைகளை இழந்து உணவின்றி சிரமப்பட்டனர். அதிகரித்து வரும் நோய்த்தொற்று மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளையும், நண்பர்களையும் இழந்து தவித்தனர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மீண்டும் கைரேகை பதிவு!

இந்த நிலையில் அரசு பல நிவாரணத் தொகைகளையும் வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு கழக நிறுவனத்தால் ஆதிதிராவிட மக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய ஆதிதிராவிட நபர் இறந்திருந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஆஷா என்ற திட்டத்தின் மூலம் 20 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தாட்கோ மூலம் செயல்படவுள்ளது. ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் எனவும் இத்திட்டத்தில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29 முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – ஜூலை 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்!

கடன் பெற நிபந்தனைகள்:

  • ஆதிதிராவிடர் குடும்பத்தில் கொரோனாவால் இறந்தவர் வருமானம் ஈட்டக்கூடிய நபராக இருக்க வேண்டும்.
  • வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அவரின் சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை அவசியம்.
  • இறந்தவர் வருமானம் ஈட்டக்கூடியவர் என்பதற்கான சான்றிதழ் தாசில்தாரிடம் பெறப்பட வேண்டும்.
  • ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
  • மேலும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 6வது தளத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 0424-2259453 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!