தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களை போல அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படியை திடீரென்று நிறுத்தி வைத்தது. இந்த தொகையானது நாட்டின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அதிகரித்த விலைவாசியால் ஊழியர்கள் மீண்டும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28% ஆக உயர்த்தப்பட்டது. பிறகு 2021 ஆண்டு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2022 ஏப்ரல் மாதம் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது.

திருப்பதி தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதற்கும்’ கட்டுப்பாடு, பக்தர்களுக்கு ஏமாற்றம்!

இதனையடுத்து மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை வழங்கியது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல 34% ஆக அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 7-வது மாவட்ட மாநாட்டில் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!