மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு விரைவில் – 7வது ஊதியக்குழு தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு விரைவில் - 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு விரைவில் - 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு விரைவில் – 7வது ஊதியக்குழு தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி விரைவில் அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றை கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் மூன்று தவணைகளாக நிலுவையில் வைத்தது. இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. மேலும் அனைவரின் கோரிக்கையின் படி, கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மற்றும் DR உயர்வு வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதனால் 17% ஆக DA 28% ஆக அதிகரிக்கப்பட்டது.

ரயில்வே துறையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு போனஸ் – மத்திய அரசு ஒப்புதல்!

அகவிலைப்படி உயர்வுடன் தொடர்புடைய மற்ற பலன்களும் ஊழியர்களுக்கு அதிகரித்தது. இதனால் ஊழியர்களின் மாத ஊதியம் அதிகமாக கிடைத்தது. DA உடன் தொடர்புடைய வீட்டு வாடகை படியும் தற்போது செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை லாபம் கிடைத்துள்ளது. அகவிலைப்படியுடன், மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அரசு அறிவிப்பின் படி, அதிகரிக்கப்பட்ட DA தொகை 2021 ஜூலை மாதம் வழங்கப்படும் என்றும், நிலுவை காலத்திற்கு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.1.5 கோடி வரை பெறலாம்!

இதனால் ஊழியர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் பிரதமர் மோடி முக்கிய முடிவை அறிவிப்பார் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெரும்பாலான ஓய்வூதியதாரர்களின் வருமானம் கோவிட் -19 சூழ்நிலையின் விளைவாக மிகவும் குறைவாக இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் மருத்துவ செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர். தற்போதைய நிலைமையில் நாட்டில் பொருளாதார சிக்கல் எழுந்துள்ள போதிலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூய்தியதாரர்களின் நலனை விரைவில் DA மற்றும் DR வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here