பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நிறைவு – இனி ரூ.1000 அபராதம்!

0
பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நிறைவு - இனி ரூ.1000 அபராதம்!
பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நிறைவு - இனி ரூ.1000 அபராதம்!
பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நிறைவு – இனி ரூ.1000 அபராதம்!

முன்னதாக, பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில் இனி ரூ.1000 அபராதம் செலுத்தி பான் அட்டையுடன் ஆதாரை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு இணைப்பு:

ஆன்லைன் மூலமான மோசடிகளை தடுக்க கட்டாயமாக பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும். அதாவது, வங்கி மற்றும் புதிய ஆவணங்களை உருவாக்குவதற்கு கூட பான் கார்டுடன் இணைக்கப்பட்ட ஆதார் கார்டு தான் தேவைப்படுகிறது. இதனால் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க அவ்வப்போது அரசு வலியுறுத்தி வருகிறது. இதோடு மட்டுமல்லாமல் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31 தான் கடைசி நாள் என காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

இதன் பின்னர், தாமதக் கட்டணம் ரூ.500 செலுத்தி ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைத்து கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், பான் ஆதாருடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி முடிந்துவிட்டது. நேற்றில் இருந்து பான் ஆதாருடன் ஆதார் கார்டை இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி பான் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க அபராதம் செலுத்துவது என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் LPG சிலிண்டர் வாங்குவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – விலை பட்டியல் வெளியீடு!

முதலில், வருமான வரித் துறை இணையதள முகவரியான https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்கிற பக்கத்திற்கு சென்று அதில் உள்ள CHALLAN NO./ITNS 280 என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்னர், Tax Applicable பகுதியில் உள்ள Income Tax என்கிற பகுதியை கிளிக் செய்யவும். அடுத்து, Type of Payment என்பதில் (500) Other Receipts என்பதை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்யவும்.  பின்னர், Permanent Account No பகுதியில் பான் எண்ணை பதிவு செய்து Assessment Year என்பதில் 2023-2024 ஐ தேர்வு செய்யவும். பின்னர் மாவட்டம், மாநிலம், பின்கோடு அனைத்தையும் பதிவு செய்து கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும். பின்னர், ரூ.1000 அபராதத்தை செலுத்திவிட்டு அங்கீகரிக்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!