ஆதார், பான் இணைப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு – வருமான வரித்துறை எச்சரிக்கை!

0
ஆதார், பான் இணைப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு - வருமான வரித்துறை எச்சரிக்கை!
ஆதார், பான் இணைப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு - வருமான வரித்துறை எச்சரிக்கை!
ஆதார், பான் இணைப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு – வருமான வரித்துறை எச்சரிக்கை!

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 30) முடிவடைய இருக்கிறது. இந்த செயல்முறையை முடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆதார் இணைப்பு

கடந்த 2017ம் ஆண்டில் மத்திய அரசாங்கம் ஆதார் ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை கட்டாயமாக்கி இருந்தது. இதற்காக பொது மக்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கொரோனா பரவல் பாதிப்புகள், சர்வர் கோளாறுகள் நிமித்தமாக ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இறுதியாக ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2022 வரை நீட்டித்து மத்திய அரசாங்கம் உத்தரவிட்டது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் அதாவது ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனால் இன்றைக்குள் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்காத ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார், பான் இணைப்பை மேற்கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் இனி இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை முதல் ஆதார், பான் இணைப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.1000 அபாரதமதாக வசூலிக்கப்படும்.

ஜூலை 1 முதல் தினசரி காலை 8 மணிக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

ஆதார் பான் இணைப்பு:

  • இந்த செயல்முறைக்கு முதலாவதாக www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
  • அதில் Link Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து உங்கள் பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை சரியாக உள்ளிடவும்.
  • இப்போது, ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் இருக்கிறது என்றால் அதற்குரிய விவரத்தில் டிக் கொடுக்க வேண்டும்.
  • தொடர்ந்து கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பெட்டியில் டிக் செய்ய வேண்டும்.
  • இப்போது கேப்ட்சாக் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆதார், பான் எண்ணுடன் இணைக்கப்படும்.

குறிப்பு:

உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டதா என்பதை சரிபார்க்க www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்லவும். அதில் பான் எண், பிறந்த தேதி, கேப்ட்சாக் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து சப்மிட் கொடுத்தால் இது குறித்த விவரங்கள் தோன்றும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!