12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU Villupuram) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

DCPU Villupuram வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே இளைஞர் நீதி குழுமத்தில் (JJB) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Assistant cum Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்வதில் Higher சான்றிதழ் பெற்றவராகவும், கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றவராகவும் இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.

Assistant cum Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 40 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத தோறும் ரூ.11,916/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (05.09.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here