கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகளை கலந்து ஆய்வு – DCGI ஒப்புதல்!

0
கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகளை கலந்து ஆய்வு - DCGI ஒப்புதல்!
கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகளை கலந்து ஆய்வு - DCGI ஒப்புதல்!
கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகளை கலந்து ஆய்வு – DCGI ஒப்புதல்!

இந்தியாவின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் கலவை பற்றிய ஆய்வை மேற்கொள்ள வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஆய்வு

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பயன்பாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் மருந்துகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக சமீபத்திய ஆய்வு தெளிவுபடுத்தி இருந்தது. இதை தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI), கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளை இணைத்து ஒரு ஆய்வை மேற்கொள்ள வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்துள்ளார். அந்த வகையில், வேலூர் CMC கல்லூரியில், தடுப்பூசி மருந்துகளின் கலவை பற்றிய ஆராய்ச்சி ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று டாக்டர் வி.கே.பால் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு – முதல்வரின் சிறப்பு விருதுகள்!

இதற்கு முன்னதாக மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) பொருள் நிபுணர் குழு, ஜூலை 29 அன்று ஆய்வை நடத்த பரிந்துரைத்தது. இந்த ஆய்வானது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஆய்விலிருந்து வேறுபட்டதாக இருக்கும் எனவும் இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகளை இணைப்பதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த சில தனிநபர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் முதல் மருந்தாக கோவிஷீல்டு மற்றும் ஆறு வார இடைவெளியில் இரண்டாவது மருந்தாக கோவாக்ஸின் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 13 UAE பறக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – சென்னையில் களமிறங்கிய கேப்டன் தோனி!

ICMR நடத்திய இந்த ஆய்வில், அடினோ வைரஸ் வெக்டர் பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான தடுப்பூசியின் கலவையுடன் நோய்த்தடுப்பு செய்யப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸால் உண்டாக்கப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பானது மட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு தன்மையையும் உள்ளடக்கியதாக கண்டறியப்பட்டது என ICMR ன் தொற்றுநோயியல் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார். எவ்வாறாயினும், 18 பங்கேற்பாளர்கள் மீது மட்டுமே இவ்வகை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இது குறித்து விரிவான மற்றும் ஆழமான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று உயர் மருத்துவ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!