மீண்டும் களேபரமான பிக் பாஸ் வீடு.. ஷிவினுடன் மல்லுக்கட்டும் தனலட்சுமி – பிக் பாஸ் ப்ரோமோ 2!

0
மீண்டும் களேபரமான பிக் பாஸ் வீடு.. ஷிவினுடன் மல்லுக்கட்டும் தனலட்சுமி - பிக் பாஸ் ப்ரோமோ 2!
மீண்டும் களேபரமான பிக் பாஸ் வீடு.. ஷிவினுடன் மல்லுக்கட்டும் தனலட்சுமி - பிக் பாஸ் ப்ரோமோ 2!
மீண்டும் களேபரமான பிக் பாஸ் வீடு.. ஷிவினுடன் மல்லுக்கட்டும் தனலட்சுமி – பிக் பாஸ் ப்ரோமோ 2!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 43-வது நாளின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம் போல் அதில் தனலட்சுமி வீண் சண்டை செய்து கொண்டிருக்கிறார்.

பிபி ப்ரோமோ:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு இந்த வாரம் ஆரம்பத்திலேயே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ராஜ குடும்பம் மற்றும் பொக்கிஷம் தொடர்பான டாஸ்க் நடத்தப்பட்டது. அதில், ஆரம்பத்தில் இருந்தே அசீம் மிகவும் கோவமாக, யாருடனும் ஒத்துழைக்காமல் நடந்து கொண்டார். சண்டையுடன் தொடங்கிய அந்த டாஸ்க் இறுதி வரை பெரும் கூச்சலுடனேயே முடிந்தது. இதன் பலனை போட்டியாளர்கள் அனைவரும் கமல் சாரிடம் பெற்றுக் கொண்டனர்.

Follow our Instagram for more Latest Updates

எடுத்த கதாபாத்திரத்தை விட்டு வெளியே சென்று யோசிப்பது தவறான செயல் என்று கமல் கண்டித்தார். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீட்டின் தலைவரை தேர்வு செய்வதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டு, தனலட்சுமி அதில் அப்செட் ஆக உள்ளார். இந்த வார வீட்டின் தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்டு டீம் பிரிக்கும் போதும் தனலட்சுமி செல்ல வில்லை.

சினிமாவில் களமிறங்கிய விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகர் – வெளியான சூப்பர் அப்டேட்!

Exams Daily Mobile App Download

இதனால் என்ன ஆனது என்று மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தனலக்ஷ்மியிடம் கேட்டு, சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு ஷிவின் பேசும் போது தனலட்சுமி மிகவும் கோவமாக அவரிடம் கத்துகிறார். இதனால் ஷிவின் அந்த இடத்தை விட்டே செல்கிறார். அப்போதும் தனலக்ஷ்மியின் கோவம் குறைந்த பாடில்லை. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!