டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மாவட்ட ஆலோசகர் வேலைவாய்ப்பு – சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மாவட்ட ஆலோசகர் வேலைவாய்ப்பு - சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மாவட்ட ஆலோசகர் வேலைவாய்ப்பு - சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மாவட்ட ஆலோசகர் வேலைவாய்ப்பு – சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர்,தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்குள்ளாகி சிரமப்பட்டு வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலையிழந்து மாத வருமானமின்றி அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தளர்வுகளின் ஒரு பகுதியாக அரசு அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலை வாய்ப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் அரசு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!

மேலும் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தாற்காலிகமாகவும், ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர்,தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாவட்ட ஆலோசகர் பணிக்கு மாதம் 35 ஆயிரமும் ரூபாய், சமூக பணியாளர் பணியிடத்திற்கு மாதம் 13,000 ரூபாயும் தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு மாதம் 10,000 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் – PM SYM திட்டத்தின் அம்சங்கள்!

மேற்கண்ட பணியிடங்களுக்கு வயது வரம்பு 35 ஆகும். சமூக பணியாளர் பணியிடத்திற்கு பொது சுகாதாரம் சமூக பணியாளர் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு சமூக பணியாளர் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பு மட்டும் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு, கணினி அனுபவம் மற்றும் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேற்சொன்ன பணியிடங்கள் குறித்து salem.nic.in/notice_category/recruitment என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளல்லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 4ம் தேதி மாலை 6 மணிக்குள் மாவட்ட நல வாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!