திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் வெளியீடு!

0
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு - தரிசன டிக்கெட் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு - தரிசன டிக்கெட் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள முக்கிய பூஜைகளுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஆதார் கார்டு அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.

தமிழகத்தில் மே 30, 31 ஆம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை? அதிகாரிகள் திட்டவட்ட அறிவிப்பு!

மேலும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மாதந்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன் படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஸ்ரீவாரி சேவை கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபாலனகர சேவை ஆகியவைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு உரிய தகவல் அவர்களுடைய மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. அதன் பின்னர் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் . தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 1,000 டோக்கன்கள் வீதம் வெளியிடப்படும் நிலையில் அவற்றை பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here